Sunday, August 15, 2021

மர்ம கோட்டை வாசல்

*மர்ம கோட்டைவாசல்* 🖋️மு.காசிராசன் _தொடர்-2_ இதுவரை... ஆர்வத்தின் மிகுதியால் பொன்மேடு சென்றடைந்த கரிகாலன் அதிசய கோட்டை நுழைவாயிலில் அதன் குறிப்பு (அ) எச்சரிக்கை கண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும்போது டம் என்று ஒரு சப்தம் கேட்டது. இனி......... டம் என்ற சத்தத்தை கேட்டதும் உடல் சிலிர்க்க சற்று கிலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தான் சுமார் ஐந்து அடி உயரமுள்ள வாட்டசாட்டமான ஆள் தான் கரிகாலன், வீரத்திற்கும் தைரியத்திற்கும் குறைவில்லை என்றாலும் இடம் நேரம் மற்றும் சூழல் பயத்தை ஏற்படுத்துவதாக தான் இருந்தது. என்ன சப்தம் என்று அவன் சிந்திக்க முற்படும் முன் மீண்டும் அதே சப்தம் இரட்டையாய் டம் டம் என்று கேட்டது. மூன்றாவது முறை ஒலிக்கும் முன் அது போர்முரசு என்பதை யூகித்து அறிந்து கொண்டான். முரசின் ஒலி எழுந்தவுடன் அந்த கோட்டையின் வாசல் பெரும் இரைச்சல் சப்தத்துடன் திறக்கிறது, திறந்ததும் அவன் கண்ட காட்சி அவனை பிரமிப்பில் ஆழ்த்தியது மிகப்பெரிய பொன்னால் செய்யப்பட்ட கோட்டை ,மின்னும் மாளிகைகள் என கண்ணால் காணும் இடமெல்லாம் பளிச்சிடும் கோட்டையை இருக்கும் என்று எண்ணி அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி அங்கே எதுவும் இல்லை ஒரே ஒரு நடுகல் ஒரு கழுமரம் தவிர்த்து சுற்றிலும் வெறும் சுத்த ஆற்று மணல் மட்டுமே நடுகள் எனப்படுவது முந்தைய காலத்தில் போரில் தனது வீரத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியவனுக்கும் வீரமரணமடைந்த தளபதி போன்றோருக்கும் ஓர் இனத்தை காப்பாற்ற தனது இன்னுயிரை கொடுத்த மனிதர்களுக்கும் அவர்கள் நினைவாய் நடும் கல் இந்த நடுகல் ஆகும் அந்தக் கல்லில் இறந்த வீரனின் உருவம் அவன் செயல் அவன் மரணம் பற்றிய குறிப்புகள் இருக்கும் அந்த தலைவனின் புகழ் அடுத்த தலைமுறையினர் அறிவதற்காக இந்த நடுகல் முறையை நமது முன்னோர்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்தபடியாக இருக்கும் கழு என்பது கழுமரம் என்று அறியப்படுகிறது ஒரு அரசின் அல்லது நாட்டில் கொடும் குற்றம் செய்தோருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச கொடுமையான தண்டனை இதுவாகும். ஏழு அடிக்கு மேல் உள்ள ஒரு மரத்தின் உச்சியை கூர்மையாக்கி அது தண்டனைக்குரிய வரை உடலில் துணி இன்றி அந்த மரத்தின் எண்ணெய் தேய்த்து கை கால்களை கட்டி அமர வைப்பர் ,அந்தக் கூர்மையான மரமானது அவன் உடலின் ஒரு பகுதி வழியே சென்று மற்றொரு பகுதியை கிழித்துக்கொண்டு வெளியே வரும் பயங்கர வேதனையுடனும் ஓலத்துடனும் அந்த உயிர் பிரியும் இறந்த நபரின் உடலும் கூட நாய் நரிக்கு இரை ஆகுமே தவிர அடக்கம் செய்யப்பட மாட்டாது. மிகப்பெரிய குற்றம் செய்தவருக்கு மட்டுமே இந்த தண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது இந்த இரண்டையும் கண்டவுடன் "இது யாருக்கான நடுகல்? கண்டிப்பாக இங்கு அரண்மனை இருந்திருக்க வேண்டும். அது இப்போது எங்கே? அந்த அரசனின் பெயர் என்னவாக இருக்கும் ? "என்ற ஆயிரம் வினா நொடிப்பொழுதில் அவன் மனதில் நிரம்பிக் கொண்டிருந்தது இருப்பினும் அந்த பின்குறிப்பு எச்சரிக்கை வரிகள் உள்ளே காலடி எடுத்து வைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத ஒன்று அவன் கண்ணில் பட்டது அந்த நடுகல்லுக்கு சற்று தொலைவில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்தாள் இளம் கன்னி ஒருத்தி முகம் சரிவர தெரியவில்லை என்றாலும் அவள் கார்மேக கூந்தலும் இடையழகும் அவள் முகத்தை காண வேண்டும் ,அவள் கண்ணழகு முன்னழகும் காணவேண்டும் என்று துடிக்க வைத்தது. அவன் வயதின் காரணமோ என்னவோ அவனையும் அறியாமல் கோட்டை வாயிலை தாண்டி காலை வைத்து வைத்தது கோட்டைக்குள் நுழைந்தன சுற்றிலும் மணல் மீது சிறு சிறு பனை மரங்கள், உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டிய பனைகள் முட்டி உயரம் தான் இருந்தது சுற்றிலும் எதையும் நோக்காது அவன் ஆர்வத்துடன் காண எண்ணிய நடுகல்லையும் காணாது . அவன் கன்னியை நோக்கி நடந்தான் "சரக் சரக்" என்ற சப்தம் திரும்பிப் பார்த்தான் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அவளை நோக்கி நடந்தான். யாரோ தன்னை பின்தொடர்வதை போல் உணர்ந்தான் இருப்பினும் கன்னி அவள் முகம் காண வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நெருங்கினான் .தென் திசை நோக்கி அமர்ந்து இருந்தால் அந்தக் கண்ணி கைகளில் பொன் வளையல் ,கூந்தலை பின்னி தொங்கவிட்டிருந்தாள் அந்த கூந்தல் தரையை உரச பூச்செடிகளை பூக்கள் தயாராக இருந்தது நிலம். மெல்ல "யார் நீ? "என்று கேட்டான். பதில் ஏதும் வரவில்லை மீண்டும் "யார் நீ? இங்கே எப்படி வந்தாய் ?" என்று சற்று குரலை உயர்த்தி கேட்டான். பதில் ஏதும் வரவில்லை சற்று பயம் கலந்த தயக்கத்துடன் அவள் தோளில் கை வைத்தான். அவள் எழுந்து திரும்பி நின்றாள் முகத்தில் இமைகள் இமைக்க மறந்து, ஆடாமல் அசையாமல் இருந்தான் அவள் முகம் அவனை அப்படி மாற்றியது. "இவள் பூலோக பெண்ணாக இருக்க" முடியாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் .அழகிய மீன் போன்ற விழிகளை உடையவள் காதில் பொன்னால் ஆன தோடு அணிந்து கழுத்தில் எளிமையான பொன்னாபரணம் அணிந்திருந்தாள் பொன்னழகை மிஞ்சும் அளவுக்கு அந்த பென்னழகு பார்ப்பவரை மயக்குமாறு இருந்தது தயங்கியபடி நின்றான் கரிகாலன். "இவள் பூலோக பெண்ணாக இருக்க முடியாது. இவள் தேவலோக பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் " என்று எண்ணிக் கொண் அவள் குரல் அழகை கேட்க துடித்து "உன் பெயர் என்ன?" என்று கேட்டான் அந்த அழகு முகம் மாறத் தொடங்கி அவள் விழிகள் அவளுக்கு பின்னால் பாய்ந்தது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கை அவன் தோளைப் பற்றியது, சுமார் ஆறடி மதிக்கத்தக்க ஒரு கரிய நிழல் அவன் முன் தெரிய இதைத்தான் அவள் பார்த்தாளோ என்று பயம் கலந்த சிந்தனையுடன் ஒரு நிமிடம் அவன் இதயத்துடிப்பு அவனிடத்தில் இல்லை. படபடவென இதயம் துடிக்க கிலியுடன் மெதுவாக பின்னே திரும்பினான் கரிகாலன் ........ தொடரும்........

Thursday, August 5, 2021

மர்ம கோட்டை வாசல்

அனைவருக்கும் வணக்கம் நீண்ட நாட்களாக என் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மர்ம முடிச்சை சில வரலாற்றுப் புனைவுகள் துணைகொண்டு அவிழ்க்கும் முயற்சியே இந்த சிறிய தொடர்கதை இந்த இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்று எண்ணுகிறேன் இப்படிக்கு உங்கள் காசிமணி என்ற மு.காசி ராசன் *மர்ம கோட்டைவாசல்* _தொடர் 1_ ஆகாய கங்கையை கண்டவர் சிலர் மட்டுமே எனினும் பல பூலோக கங்கைகள் இந்த பூமியை செழிக்க வைத்து அழகு படுத்திக் கொண்டுதான் இருக்கிறது அப்படி இரண்டு கங்கைகள் கொஞ்சி விளையாட வேளாண் மரபினர் மண்ணை ஆள பூலோக சொர்க்கம் போலிருந்தது இருகங்கைகுடி எனும் அழகிய கிராமம் அந்த கிராமத்தில் முத்துக் கருப்பனுக்கும் பொன்னம்மாளுக்கும் ஒரே மகனாய் பிறந்தவன்தான் கரிகாலன் ஓங்கி உயர்ந்த பணக்கார குடும்பம் இல்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பம் பசி என்று யாரும் வந்துவிட்டால் உணவு கொடுத்து உபசரித்து அனுப்பி வைக்கும் மரபு உடையவர்கள், தனது மகன் மருத்துவர் ஆகணும் பொறியாளர் ஆகணும் என்று பல்வேறு ஆசைகள் பெற்றோருக்கு இருந்தாலும், அவன் மனம் என்னவோ வரலாற்றிலும் மர்மங்களும் சென்றுகொண்டிருந்தது. இருபது வயதை கடந்த பின் அந்த ஆர்வம் அதிகரித்தது. தனது கிராமத்தில் உள்ள வழக்கங்கள் குடும்ப முறை என அனைத்தையும் ஆராயத் தொடங்கினான் கரிகாலன். அன்றைய காலகட்டத்தில் மடை காவல் அதிபதிகளை மடையர்கள், மடை குடும்பர்கள் ,என்று அழைக்கும் வழக்கம் இருந்தது .இவர்களே மடைதிறந்து வயலுக்கு நீர் பாய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளாய் இருந்துள்ளனர். இவற்றை எல்லாம் ஊர் பெரியவர்கள் மூலமாகவும் தனது மாமாவிற்கு மடை அதிகாரம் இருந்ததால் அவர் மூலமாகவும் அறிந்து கொண்டு அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கொண்டிருந்தான். இவனது இந்த ஆர்வம் இவனை அரியணை வாயிலுக்கு கொண்டு செல்லும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அதே ஆர்வம் அவனை ஆபத்தின் வாயிலுக்கு கொண்டு சென்றது .அந்த கண்மாய் மடையில் ஒரு சிறு கல்வெட்டு கரிகாலன் கண்ணில்பட்டது, கீழே இறங்கிச் சென்று உற்று நோக்கினால் அதில் ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதற்கான ஆதாரம் தென்பட்டது. அந்த வரிகளை கரிகாலனால் வாசிக்க முடிந்தது இந்த கிழவனேரி கண்மாய் இலுப்பைகுடி கிழவனாரால் 730ல் பொன்னகர அரசர் அனுமதியுடன்திறந்து வைக்கப்படுகிறது என்று எழுதி இருந்தது. ஆச்சரியத்தில் கரிகாலனின் கண் விரிந்தது ,எங்கே அந்த பொன்னகரம் அதை ஆண்ட அரசர் யார் என்ற ஆர்வம் அவனை தூண்டியது சரியாக தூங்காமல் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். பெரியவர்களிடம் விசாரித்தான், பலரின் அறிமுகத்துக்குப் பின் அவனுக்கு கிடைத்தது ஒரு தடயம் பொன்மேடு. அதே இருகங்கைகுடிக்கு தெற்கே அமைந்துள்ள பகுதி தான் பொன்மேடு. இதைப்பற்றி தந்தை முத்துக்கருப்பனிடம் விசாரித்தான் கரிகாலன். அவரும் அதில் உள்ள அமானுஷ்யத்தை, மர்மத்தையும் விளக்கிக் கூறினார். யாரும் தனியே நடந்து செல்ல பயப்படும் பகுதிதான் அந்த பொன்மேடு காரணம் திடீரென சிரிப்பு சப்தமும் ,வாள்வீச்சு சப்தமும், ஒப்பாரி வைத்து அழும் சப்தமும் கேட்கும் என்றும் அமாவாசை தினத்தில் அந்த பக்கம் யாரும் போவது கிடையாது என்றும் கூறினார். ஏனென்று கரிகாலன் வினவ அது பற்றி தனக்கு சரியாக தெரியாது எனவும் ஆனால் அன்று அந்த பக்கம் செல்பவர்கள் இதுவரை திரும்பியது இல்லை எனவும் கூறினார். ஒரு முறை சென்று பார்த்தால்தான் என்ன என்று கரிகாலன் கூற உடனே பொன்னம்மாள் அவனைத் திட்டினாள் உன் ஆர்வம் எல்லை மீறுகிறது காலா அதீத ஆர்வம் நம்மை ஆபத்தில் சிக்க வைத்து விடும். இந்தப் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள் என்று கடிந்து கொண்டாள். சரிமா விடு என்று பேச்சுக்கு சொன்னாலும் அவன் எண்ணம் பொன் மேடை நோக்கியே இருந்தது அம்மாவாசை நெருங்க நெருங்க அவன் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்த அமாவாசையும் வந்தது ,வீட்டில் பெற்றோர் உறங்கி விட்டதை உறுதிசெய்த கரிகாலன் கையில் விளக்கை எடுத்துக்கொண்டு பொன்மேடு நோக்கி நடந்தான். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பொன்மேடு சென்றடைந்தான். நேரம் 11 மணியைத் தாண்டியது அவன் வாழ்வை புரட்டிப் போடும் நேரம் நெருங்கியது, சரக் என்ற சப்தம் ஒரு நொடியில் பயந்தவன் பின்னே திரும்பி யார் என்று கேட்டான் பதில் ஏதும் வரவில்லை, மீண்டும் சரக் சரக் என்று சத்தம் சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை ஆள் நடமாட்டமும் இல்லை அவன் கையில் வைத்திருந்த விளக்கை தவிர வெளிச்சம் தர எதுவுமில்லை திடீரென ஆந்தை வீர் கொண்டு அலறியது மற்ற பறவைகளெல்லாம் பறக்க ஆரம்பித்தன, பறவைகளின் சத்தமும் கேட்க என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று எதுவும் புரியாதவனாய் சற்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான் அப்பொழுதுதான் அவன் சற்றும் எதிர்பாராத அந்த விடயம் நடந்ததும் அவன்முன் மிகவும் பழமையான ஒரு கோட்டையின் நுழைவு வாயில் பூமியிலிருந்து மேலே எழும்பி கொண்டு வந்து நின்றது. அதிசயத்து அவன் அந்த வாயிலை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கற்களால் மிக நேர்த்தியாக தெளிவாக செய்யப்பட்ட நுழைவு வாயில் அது அதன் உச்சத்தில் இரண்டு வாள்களுக்கு நடுவில் பிறைச்சந்திரன் பக்கவாட்டில் மீன் சின்னமும் கதவின் மற்ற பகுதிகளில் சிறு சிறு மீன் சின்னமும் மீன்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தன மத்தியில் " *_பொன்னகர் அரண்மனைக்கு செல்லும் நுழைவு வாயில்*_ "என்றும் கீழே குறிப்பில் , "__உள்ளே செல்ல அனுமதி உண்டு திரும்பி வர நினைத்தால் உயிர் பறிக்கப்படும்__ " இது காலன் கட்டளை என்றும் எழுதி இருந்தது அந்த வார்த்தை அவனை அச்சுறுத்தியது உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். கரிகாலன் ஒரு அடி முன் எடுத்து வைக்க டம் என்று ஒரு சத்தம் கேட்டது பயத்துடன் இரண்டடி பின்வாங்கினான் அப்போது .............. தொடரும்....... 🖋️மு.காசிராசன்

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...