கெட்டியான
மாலை வேளையிலே
கொட்டும்
மழைச் சாரலின் நடுவினிலே
ஓர்
ஒழுகாத ஓலை வீடு
அந்த
வீட்டிற்கு முன்னே
இரு
இளம்பட்சிகளின் காதல் கூடு
அது
பிணைந்திருக்கிறது
வாசமுள்ள
வசந்தமரத்தோடு
சில்லென்று
காற்றடிக்க
சிறுஞ்சிட்டு
தன்சிறகடிக்க
இளஞ்சிட்டும்
ஆமோதிக்க
இனி
வேண்டாம் தாமதிக்க
அவை
கொஞ்சும் வேளையிலே
என்னிடம்
தஞ்சம் புகுந்தது
தேனீர்க்குவளை
கைகளில்
குவளையை ஏந்தி
கண்களில்
காதலை ஏந்தி
முகத்தில்
புன்னகை பூத்து
கார்மேகக் கூந்தலிலே
கமலும்
மல்லிகை கோர்த்து
வந்தாள்
என்னவள்
நஞ்சு
கூட நன்மைபயக்கும்
வஞ்சமில்லா
உன்
பொற்கரங்களால்
கொடுத்தாயானால்
ஆதலின்
நீ
கொடுத்த தேனீரின் தித்திப்பு
தேன்சுவையையும்
தோற்கடிக்கிறதே அன்பே
என்று
நான் கூற
நானத்துடன்
நழுவி வந்து
என்
தோள்களிலே சாய்ந்தாள்
நான்
அருந்திவைத்த அந்தக்குவளை
அசந்து
நிற்கிறது
அமிர்தத்தை
தன்னுல்
தாங்கியதனால்
நான்
ஏழை என்று எண்ணியதில்லை
காரணம்
பொன்னும்,
மணியும், முத்தும் ,முகிழும்,
பவளமும்
, தரணியெங்கும்
தாரைவார்த்துக்கொடுத்தாலும்
கிடைக்காத
அற்புத பொக்கிஷம்
என்
தோளில் தலைசாய்த்து
இசையினும்
இனிதாய்
தன்குரலில்
இதழ்களுக்கு
இடைப்பட்டுவரும்
வார்த்தைகளால்
என்செவியில்
இன்பத்தேன்
பாய்ச்சும்போது
எப்படி
என்னமுடியும்
நான்
ஏழையென்று
இந்த
ஏழைக்குடிலை
ஏழுலகமும்
எட்டிப்பார்க்கிறது
இதுபோன்ற
காதல்ஜோடியை
எத்தனை
காலம்சென்றாலும்
பார்க்கமுடியுமா
என்ற ஏக்கத்துடன்….
என்றும்
ஈருடல் ஓருயிராய்
பொன்மலரே
உன்னுடன்
இறுதிவரை
இருக்க
வேண்டுகிறேன்
….