பொதுவாக கிராமங்களில் சிறுதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடுகள் கொடை(கோவில் கொடை),என்கிற பெயரில்தான் நடைபெரும் அதிலும்பெரும்பாலான கோவில்கள் இராசா கோவில்,கருப்பசாமி கோவில், மாடசாமி (அ) சுடலைமாடசாமி கோவில், அய்யனார் கோவிலாகத்தான் இருக்கும்.
இந்த கொடைவிழா கலணி ,கல்யாணம் என்று வேறுசிலபெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தகோவில் கொடை என்பது என்ன? இதன் மூலமும் ஆதியும் என்ன? என்பதை இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையின் மூலம் காண்போம் .
பெருமபாலும் இந்த வழிபாட்டுமுறை ஓர் அரசனையோ அல்லது அவன் ஆட்சியின் கீழ் உள்ள தளபதியையோ ஏனைய வீரனையோ மையமாக வைத்து நடைபெருகின்றன. கொடை என்பது பரிசளித்தல் ,அளித்தல் , தானம் ,கொடுத்தல் என்று பொருள்படும் இங்கு கொடுத்தல் என்பதை எடுத்துக்கொள்வோம்.ஆனால் இந்த கொடைவிழாவில் அரசன் மக்களுக்கு கொடுப்பதற்கு மாற்றாய் மக்கள் அரசனுக்கு கொடுக்கின்றனர். ஆம் இந்த கொடைவிழா தமிழ்க்குடிமக்களின் காலத்தின் சாரமாய் கலாச்சாரமாய் இருந்து வருகிறது. இந்த கொடைவிழாவின் துவக்கம் முதல் முடிவு வரை கடவுளைத்தவிர்த்து தம்மை திறமுடன் ஆண்ட அரசனையும் ,அவரது படைத்தளபதிகளையும், அரசகுடும்பத்தினரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியாக வருடம்தோறும் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். இந்த கருத்திற்கு கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாய் சில சான்றுகள் அமைந்துள்ளது அதைப்பற்றி காணலாம்.
அனத்து கோவில்களிலும் இந்த கொடைவிழா ஒரேமாதிரியான வழிமுறைகளை கொண்டுள்ளது.
எடுத்தவுடன் மேளதாளங்களுடன் அந்த கோட்டை (கோவிலின்) நாயகனுக்கு அதாவது அரசனுக்கும் தளபதிகளுக்கும் மரியாதை செய்து தங்கள் மக்களைக்கணவருமாறு அழைப்பார்கள் இதற்கு குடியழைப்பு என்று பெயர். குடிமக்கள் தங்கள் அரசனை அழைப்பதால் இதற்கு குடியழைப்பு என்று பெயர் வந்துள்ளது.
இரண்டாம் கட்டமாக அரசனின் உத்தரவுடன் பூசை ஆரம்பமாகும் முதலில் பொதுபூசை அதாவது கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் (இன்று தெய்வமாய் வணங்கப்படும் அரசர்களுக்கும் முன்னோர்களுக்கும் ) பொதுவாய் ஒரு பீடத்தில்(இருக்கை) பூசை நடைபெரும் அந்த காலத்தில் அனைவரையும் ஒன்றாய் நிருத்தி வரவேற்ற மரபு பின்னாளில் இந்த பூசைக்கு வித்திட்டிருக்கிறது. அதன் பின்னர் அவரவர் இருக்கையில் அவர்களை அமரவைத்துள்ளர் அல்லது அவர்கள் அமர்ந்து கொண்டனர்.
அடுத்தகட்டமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே படையளிட்டு பூசை நடக்கும் முதலில் இராசா அதன் பின்னர் இராணி அதற்கு பின்னர் இராசாவின் சகோதர சகோதரிகள் அவர்களைத்தொடர்ந்து மந்திரி,அவைத்தலைவர்கள், படைத்தளபதி ,படைவீரர்கள் என்று முறையாய் வரிசையாய் அமுது படைத்து (விருந்து அளித்து) வந்துள்ளனர்.
அதற்கு பின்னர் வாக்கு கேட்கும் நிகழ்வு நடைபெருகிறது.அதாவது அரசனும் அவைத்தலைவர்கள் மற்றும் தளபதி உள்ளிட்ட அனைவரும் தங்கள் நாட்டின் கடந்தகால நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்து பற்றியும் தாங்கள் அறிந்துகொண்டதை பகிர்ந்துகொண்டும் தங்கள் குடிமக்களின் குறைகளை அறிந்துகொண்டும் அதற்க்கு தீர்வு கூறி நடவடிக்கை எடுத்துவந்துள்ளனர்.இந்த நிகழ்வு இன்று வாக்கு கேட்கும் நிகழ்வாய் குறிகேட்கும் நிகழ்வாய் நடைமுறையில் இருக்கிறது.
இறுதியில் இங்கு கழுங்கு (கழு) என்று கூர்மையான சற்று உயரமான மரத்தால் செய்யப்பட்ட அமைப்பு இருக்கும் , சேவல் ,ஆடு போன்றவற்றை அதில் ஏற்றி பலியிடுவார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன ஒன்று அந்த காலத்தில் கற்பழிப்பு,தேசவிரோதம்,தேசதுரோகம் போன்ற மிகப்பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனையாய் இந்த கழுவேற்றம் இருந்துள்ளது. அதாவது அந்த கூர்மையான கழுவில் எண்ணெய் ஊற்றி பின்னர் அதன் கூர்மையான முனையில் அந்த குற்றவாளியை கைகளையும் காலையும் கட்டி அமரவைத்துவிடுவர் கூர்முனையானது ஆசனவாய்வழியே உள்ளே சென்று நேரமாகஆக உடலின் பிறபகுதிகளை கிழித்துக்கொண்டோ அல்லது வாயின் வழியாகவோ வெளியே வந்துவிடும் மிகக்கடுமையான வேதனையுடனும் பயங்கரமான ஓலத்துடனும் அவன் உயிர்பிரியும் இறந்த பின் அந்த குற்றவாளியின்
உடலைக்கூட எடுக்கக்கூடது அடக்கம் செய்யக்கூடாது மாறாய் அந்த பிணத்தை நாய் ,நரி போன்ற விலங்குகளும் , காகம்,கழுகு போன்ற பறவைகளும் தான் உண்ணவேண்டும்.இத்தகைய கொடுமையான தண்டனைகள் அந்தக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது.ஏதோ சில காரணங்களுக்காக சமணர்கள் கழுவேற்றப்பட்டது இப்படிபட்ட தண்டனைகள் தமிழகத்தில்

இருந்ததற்கு சான்றாக இன்றளவிலும் இருக்கிறது.
இரண்டாவது இதுபற்றி ஓர் சிறிய கதை உள்ளது ஓர் அரசன் போருக்குச் செல்லும்முன் கழுவில் ஓர் ஆட்டினை குத்திவைத்துவிட்டு இந்த ஆடு இறக்கும் முன் போரை முடித்து வெற்றியுடன் வருவேன் என்றும் மாறாய் இந்த ஆடு இறந்துவிட்டல் போரில் தோல்வியடைந்து வீரமரணம் அடைந்துவிட்டேன் என்று அறிந்துகொள்வாயாக என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றதாகவும் அதன் காரணமாகவே இன்றும் கோவில்களில் கழுவில் பலிகொடுக்கும் நிகழ்வு நடைபெறுவதாகவும் ஒரு செவிவழிச்செய்தி இருக்கிறது.
இந்த இரண்டு காரணங்களில் முதலாவதாய் தெரிவிக்கப்பட்ட செய்திக்கு வரலாற்றில் அதிகப்படியான சான்றுகள் கிடைக்கின்றன.இறுதியில் விருந்துமுடிந்தவுடன் மஞ்சள்நீர் தெளித்து அரசரையும் அவரது பரிவாரங்களையும் அரண்மனைக்கு இந்த குடிமக்கள் அனுப்பிவைக்கின்றனர்.
மேலும் சில சான்றுகள் இதற்கு வழுசேர்க்கின்றன, இன்று தெய்வங்களாக வணங்கப்படும் இவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை சான்றாக கூறலாம்.இராசவிற்கு பிரம்பு அல்லது செங்கோல், தளபதி உட்பட அனைத்து வீரர்களுக்கும் வல்லயக்கம்
பு(சிலம்பக்கம்பு) ,வாள், வேல்கம்பு, வெட்டருவாள்,சாட்டை ,சுருள்வாள் போன்ற 
மேலே
கூறப்பட்டுள்ளசான்றுகள் மூலம் இந்தகோவில் கொடைவிழா என்பது அரசனுக்கு,தளபதி உட்பட ஒப்பற்ற வீரர்களுக்கும் குடிமக்கள் மரியாதைசெலுத்தும் விழாவாகவும் நடுகல் வழிபாடு போன்று அந்த வீரர்களின் வீரத்தையும் நீதியையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும் எடுக்கப்பட்ட விழாதனே தவிர புராண, இதிகாசங்களை போன்று மூடநம்பிக்கைகளை விதைப்பது அல்ல என்பது உறுதியுடன் சந்தேகதிற்கு இடமின்றி நிரூபனமாகிறது.
தமிழர் வரலாறு தொடர்ந்து மீட்டெடுக்கப்படும்