கோவில் கோபுரங்களும் குடமுழுக்கும்
பெரும்பாலும் கோவில்களில்
குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சி நடைபெறும் .ஆதியில் இது தமிழர்களின் நிகழ்ச்சி
ஆனால் இன்றோ பல மந்திரங்களுடன் யார்யாரோ காரணம், சாஸ்திரம் ,சம்பிரதாயம் என்று சொல்லி
நடத்துகிறார்கள்.நமது தொலைந்த வரலாறுகளில் இதுவும் ஒன்று.

நமது கோவில் கோபுரங்கள் ஓர்
இடிதாங்கியாய் செயல்படுகிறது. கோபுரத்தின்
உச்சத்தில் இருக்கும் தாமிரத்தால் செய்யப்பட்ட கலசத்தில் வரகு,திணை போன்ற
விதைகளை இட்டு நிரப்பிவிடுவர் இந்த தாமிர கலசம் மின்னலை (ஏலக்ட்ரானை) கவரும் தன்மைகொண்டது.மழைக்காலங்களில்
இடிமின்னல் விழும்போது அருகில் வேறு எங்கும் விழாமல் தடுக்கிறது. இந்த விதைகளின் ஆயுட்காலம்
பன்னிரண்டு ஆண்டுகள் தான் அதன் பின் இந்த விதைகள் இந்த தன்மையை இழந்துவிடும் அதனால்தான்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு (கும்பபிஷேகம்) வைத்து பழைய விதைகளை எடுத்து புதிய தினை,விதைகளை மாற்றிவைத்தனர்.
நமது முன்னோர்கள் மிகவும்
புத்திசாலிகள் இந்த ஒரு காரணம் மட்டும் அல்ல இதில் மற்றொரு காரணமும் உள்ளது, இன்றுபோல்
அந்த காலகட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் மழை பொழியாது இரண்டு மாதம் மூன்று மாதம்
மழைபொழியும் இதைத்தான் பல்வேறு பாடல்களில்
மும்மாரி பொழியும் திருநாடு என்று குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு மழை பொழியும் தருணத்தில்
எதிர்பாராத விதமாய் வெள்ளம் வந்து வயல்கள் மூழ்கி விதைகள் எல்லாம் அழிந்து போனாலும்
கலசத்திலும் விமானம் என்றழைக்கப்படும் கலசத்திர்க்கு கீழ் அடுக்கில் வைக்கப்பட்டுள்ள
விதைகளை பயன்படுத்தி அந்த வகை பயிர்களை மீண்டும் உருகவாக்கவோ மீட்டெடுக்கவோ முடியும்.எவ்வளவு
வெள்ளம் வந்தாலும் நீரானது தொடமுடியாத உயரத்திற்கு கோபுரம் கட்டப்பட்டிருக்கும்.
இரவில் கோபுரத்தின் உச்சத்தில்
விளக்கு(தீபம்) போடும் வழக்கம் இருந்துள்ளது
இல்லையெனில் தற்போது மின்விளக்குகள் ஒளிருகின்றது.காரணம் என்னவென்றால் இரவுநேரத்தில் வழிபோக்கர்கள் மற்றும் புதிதாய் ஊருக்கு வருபவர்கலும்
தாங்கள் இருக்கின்ற இடத்தையும் அருகில் ஒரு கிராமம் அல்லது நகரம் இருக்கிறது என்பதை
அறிந்துகொள்வதர்க்காக இந்த வழக்கம் இருந்துள்ளது.
அதுசரி இதில் ஏன் சிற்பங்களை வைக்கவேண்டும் அதிலும் சில சிற்பங்கள் ஆபாசமாய் இருப்பது போல் இருக்கிறதே என்ற கேள்வி
மனதில் எழலாம் எழவேண்டும் வேறொன்றும் இல்லை தங்களது கட்டிடக்கலையை உலகிற்கே பறைசாற்றவும்
இல்லறம் எப்படி நடத்தவேண்டும் என்று உணர்த்தவும் கோபுரங்களில் சிற்பங்கள் பொதிக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு காரணங்களுக்காகவே
கோவில்களும் கோபுரங்களும் நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டன.இதனடிப்படையிலே கோவில்
இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் கூறினார்கள் . இதையறியாது சில மூடர்களின்
பேச்சைக்கேட்டு மூடநம்பிக்கையில் மூழ்கினோம் நாம்.
No comments:
Post a Comment