Monday, September 28, 2020

காதல் இரவு

 


பொழுது சாய்ந்தது

இருள் சூழ்ந்தது

இருள்நீக்கி ஒளிகொடுக்க

சந்திரன் வந்தான் உற்சாகமாய்

திடீரென ஒளிந்துகொண்டான்

சிறிது நேரத்தில்

அவனைவிட பிரகாசமான ஒளி

என்னருகில் ஒளிர்வதைக்கண்டேன்

திரும்பிப்பார்த்தேன்

என் கண்னுக்கினியவள் என்

கண்ணருகே நின்றாள்

எங்கே அவள் கண்ணில் பட்டால்

அவள் அழகில் மயங்கி

கைகட்டி சேவகம் செய்யவேண்டுமே

என்று பயந்தானோ என்னவோ

அவள் செல்லும்வரை

அவன் வரவும் இல்லை

என்னவள் பிரகாசம் குறையவும் இல்லை

சற்று நிமிர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தேன்

மின்னும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டாமல்

அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன

அவைகளும் ஒன்று சேர்ந்து மாலையாகி

அவள் கழுத்தில்விழ என்னதவம் செய்யவேண்டுமோ

என்று கூடிப்பேசிக்கொண்டனபோலும்

அமைதியான அந்த வேளையிலே

அழகிய தென்றல் அவளை தீண்டி

அவள் கருங்கூந்தலில் மோதி வெளியே வந்ததும்

சந்தன மரங்களில் மோதி

மல்லிகை இதழ்களைத் தட்டி

அனிச்சம் மலரை உரசி வந்த வாசமுடன்

என்னைக்கடந்து சென்றது

வழியில் ஒரு பட்டமரம் குறுக்கிட்டது

அவளைத்தொட்ட தென்றல் அதன்மீது

பட்டவுடன் அந்த பட்டமரம்

தளிர்த்தது பூக்களைப்பூத்தது

அந்தப்பூக்களெல்லாம் ஒன்றுடன் ஒன்று

போட்டிபோட்டது

  அவள் கூந்தலில் குடியிருக்கும்

குடுப்பனை யாருக்கு என்று

மீண்டும் ஒரு இனிமையான தென்றல்

ஆனால் சற்றுவித்தியாசத்துடன்

மோகத்தைத் தூண்டும் விதமாய்

காதல் தாகத்தை சீண்டும் விதமாய்

என்னை தழுவிக்கொண்டது அந்த தென்றல்

அது வேறேதுமில்லை என்னவளின் மூச்சுக்காற்றுதான்

அவள் மூச்சுக்காற்றில் நான் மூர்ச்சையானேன்

மதியை மயக்கிய அழகி

வெண் மதியை மயக்கிய பேரழகி

என் காதல் கண்மணியுடன் இரவில் ஒரு பொழுது

கரம்கோர்த்து கதிரவன் வரும்வரை

காதல் கீதம் இசைக்க காதில் அவள்

இனிய குரல் என்னும் இன்பத்தேன் சுவைக்க

கடந்து செல்லட்டும் காதல் இரவாய்……….😍😍😍😍

Friday, September 25, 2020

நான் பூதங்களின் எதிரி?

 

நிலம் பெருமைகொண்டது

 உன்பாதம் பட்டதால்

நீர் மோட்சம் பெற்றது

உன் மேனியைத் தொட்டதால்

காற்று உன்னிடம் கைதியானது

உன்மூச்சு பட்டதால்

வானம் வண்ணமயமானது

உன் பார்வை பட்டதால்

ஆதவனும் அசந்துபோனான்

உந்தன் அழகுமுகம் பார்த்ததால்

அன்பே!

நான் என்ன பாவம் செய்தேனோ?

என்னை காதலித்து கரம்பிடித்து

பஞ்சபூதத்திற்கும்  என்னை

எதிரியாக்கிவிட்டாயே!!

நான் என்ன பாவம் செய்தேனோ....

அடங்கமறு

 

அடக்கம் அழகுதான்

ஆனால் அத்துமீறும்

உன் கூந்தல்

 அதைவிட அழகு.........

144 காதல்

 

 

ஊரடங்கு காலத்திலும்

அடங்கமறுக்குதடி

அன்பே நான்

உன்மீது கொண்ட

காதல்…

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...