Thursday, April 23, 2020

மாரியம்மனும் கோவில் கூழும்

மாரியம்மன் கோவில் கூழ் எதற்கு?

  இன்றய காலகட்டத்தில் நாம் நமது பாரம்பரியம், பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை தொலைத்தோம் ,தொலைத்துக்கொண்டிருக்கிறோம் . பகுத்தறிவு என்பதே உண்மை மற்றும் பொய்யை பிரித்தறியத்தான் ஆனால் நாம் பகுத்தறிவின் பெயரை பயன்படுத்திக்கொண்டு உண்மையை அறிய மறுக்கிறோம் .
   பொதுவாக திருவிழா நேரங்களில் அல்லது காலங்களில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி பார்த்திருப்போம்  பலருக்கு அதை வாங்கி பருகிய அனுபவமும் இருக்கும் .ஆனால் ஏன் இந்த குறிப்பிட்ட நாட்களில்  அதுவும் மாரியம்மன் கோவிலில் மட்டும்  இந்த கூழ் என்னும் அமுது வழங்குகிறார்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா?. இருக்காது ஏனென்றால் கடவுளே இல்லை என்று கூறும்போது கடவுளின் பெயரால் வழங்கபெறும் பொருட்கள் பற்றி நாம் ஏன் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் நம்மில் சிலருக்கு, பலருக்கோ சிந்திக்க நேரமில்லை.
   முதலில் யார் இந்த மாரியம்மன் என்று பார்போம் , மாரியம்மன் என்பது தமிழனால் தமிழனுக்கே உண்டான அன்பும் மரியாதையும் கொண்ட வழிபாட்டுமுறைபடி இயற்கையின் ஒரு தெய்வமாய் வணங்கப்படும்   கடவுள் . மாரி என்பதற்கு மழை என்று பொருள் என்பது நமக்கு தெரியும் மும்மாரி பொழியும் திருனாடு நம் தமிழ்நாடு என்னும் வரி இதை நிருபிக்கும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் பாலை என்று ஐந்துதினைகளை பெற்றிருந்தாலும் நாகரீக வளர்ச்சி ஏற்பட்டதென்னவோ மருதத்தினையில் தன் மருதநில மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்தவர்கள் ஏரும் போரும் நம் குல வாழ்வு எனும் வாக்கியத்தில் கூட ஏர் என்று விவசாயத்திற்கு  முன்னுரிமை கொடுத்ததில் இருந்து இது நிரூபணமாகிறது .அவ்வாறாயின் அந்த விவசாயத்திற்கு மூலமுதற் தேவை  தண்ணீர் .தண்ணீருக்கு ஆதாரம் மழை இந்த மழைக்கு மற்றொரு பெயர் மாரி. நம் தமிழர்கள் பெண்மையை போற்றுபவர்கள் எனவேதான் ஆதி பெண் என்று சொல்லியுள்ளனர் இதன் காரணமாகவே உயர்ந்தவற்றிக்கு பெண் அடையாளத்தைக்கொடுத்துள்ளனர்.உதாரணத்திற்கு கங்கையை கங்கைத்தாய் என்றும் மொழியை தாய்மொழி அன்னைமொழி என்றும் வாழும்  சொந்த நாட்டை தாய்நாடு என்றும் போற்றியுள்ளனர். இதனடிப்படையிலேயே மழையை மழைத்தாயை மாரித்தாய் என்றும் மாரி அம்மா என்றும் அழைத்துவந்துள்ளனர்.இந்த இயற்கை வழிபாடிகளில் வந்த மாரி அம்மா தான் இன்று வளர்ந்து இருக்கும் மாரியம்மனாய் இருக்கிறாள்.இதில் கவனிக்கபடவேண்டிய மற்றுமொரு விடயம் ஒன்று உள்ளது பொதுவாக பெரும்பாலும் மாரியம்மனுக்கு உருவவழிபாடு குறைவு அதிகமாய் வேப்பமரத்திலோ அல்லது வேப்பமரத்திற்கு கீழே (அ) அருகில் ஒரு கல் (நடுகல்) வைத்து வழிபாடு நடத்துவார்கள் காரணம் தனது அனைத்துப்பகுதிகளிலும் மருந்துகளை தக்கவைத்திருக்கும் ஒரே மரம் வேம்பு, பூ முதல் வேர் வரை அனைத்திலும் 
மருத்துவப்பயன் உள்ளது இதனால் தான் வேப்பமரத்தை சாமியாகவும் இல்லை தலவிருட்சமாகவும் வைத்து அதன் இலை போன்றவைகளை அருள் பிரசாதமாக வழங்கிவந்துள்ளனர்.இது தமிழர்களின் வழிபாடு என்பதற்கு மற்றொரு ஆணித்தரமான சான்று ஒன்று உள்ளது .இன்று எத்தனையோ  கோவில்களில் பார்ப்பனர்கள் தான் அர்ச்சகர்களாக சமஸ்கிருதம் தான் தேவ மொழி என்கிற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்றும் நீங்கள் கண்ணாற காணலாம் கிராமங்களில் நம் மாரியம்மன் கோவில்களில் நாம் அல்லது நமது பக்கத்துவீட்டுக்காரர் தான் தமிழர் தான் பூசாரியாக இருப்பார் மற்றும் அங்கு அர்ச்சனையோ  சமஸ்கிருதத்திற்கான வேலையோ இருக்காது .அதுமட்டுமல்ல  கூழ் ஊற்றும் முறை என்பது இந்த மாரியம்மன் (மழைத்தாய்)கோவில்களில் மட்டுமே நடைபெரும் காரணம் இது கடவுளுக்கு அல்ல கடவுளின் பெயர் கொண்டு மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவி.

   கூழ் ஊற்றுவது ஏன் என்று வினவினால் பார்ப்பனர்கள் இதற்கு கூட ஒரு கதை வைத்துள்ளார்கள் ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி அம்மையார் பசியின் காரணமாய் அங்கே அருகில் இருந்த மக்களிடம் இளனீர்,கேழ்விரகு போன்ற தினைகளை தானமாக பெற்று கூழ் தயாரித்து அருந்தியதாகவும் அதன்பின்னரே கோவில்களில் கூழ் ஊற்றும் வழக்கம் வந்தது என்று கூறுவார்கள் இது உண்மையன்று .
    தமிழர்கள் யாரை கடவுளாய் வழிபட்டு வந்துள்ளார்கள் என்று ஆராய்ந்தால்  கிடைப்பது பஞ்சபூதங்களும் ,தம்மை திறமையுடன் ஆண்ட அரசர்களும்,, போரில் தனது வீரத்தை வெளிப்படுத்தி பின்னர் வீரமரணத்தை தழுவிய தளபதிகளும்,அதுபோக தங்களது முன்னோர்களும் தன்.  மாரி(மழை)யின் உதவியால் தான் விளைவித்த கம்பு,கேழ்விரகு,தினை நெல் போன்றவற்றில் தனக்கு குடும்பதேவைக்கு உணவிற்கு  எடுத்துக்கொண்டும் ,வருமானத்திற்காக சந்தைப்படுத்திக்கொண்டும், பின் மீதமுள்ள தானியங்களைக்கொண்டு கூழ் தயாரித்து ஏழைகளுக்கு அந்த மழைத்தாயின்(மாரி அம்மன்) பெயரைக்கொண்டு தானமாய் அளித்துவந்துள்ளனர்.
  அதிலும்  குறிப்பாக கூறவேண்டுமானால் ஆடிமாதம் தான் இப்படி அதிகமாய் கூழ் தயாரித்து வழங்குவர்.ஏனென்றால் ஒன்று அடுத்த போகம் விதைக்கும் தருணம்  மற்றொன்று அந்த காலநேரத்தில் (ஆடி மாதத்தில்) காற்றின் தாக்கம் அதிகமாய் இருக்கும்  தூசி போன்ற சிறு துகள்கள் நாசியின் வழியே உள்ளே சென்று சுவாசப்பாதையில் மற்றும் உடலுக்கு சில இன்னல்கள் ஏற்படும். இந்த கூழானது  (கூழ்மமானது) இந்த இன்னல்களை நீக்கும் அருமருந்து இது அறிவியலாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவேதான் , ஆடிமாதத்தில் கூழ் தயாரித்து மாரியம்மனின்(மழைத்தாய்) பெயரால் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

  இந்த தமிழன் என்பவன்  தன்னலம் இல்லா பொதுநலம்  கொண்டவன் .தமிழனின் பொதுநலனுக்கும் அறிவியல் மருத்துவத்திற்கும் இது ஒரு சான்று ,அழிக்கவேண்டியது மூடநம்பிக்கையைத்தானே தவிர கலாச்சாரத்தையும் ,நமது  மண்ணின்  அறிவியலையும் மருத்துவத்தையும் இல்லை.நம் வரலாற்றை மீட்டெடுப்ப்போம்.

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...