Tuesday, November 16, 2021

இருக்கண்குடி யில் ஆசீவகம்

*இருக்கண்குடியில் ஆசீவக குறியீடுகள் மற்றும் வரலாற்று தடயங்கள்* கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஆசீவகம் பற்றிய தகவல்கள் எதையும் காண முடிவதில்லை, ஆசீவகம் பற்றிய குறிப்புகள் கூட சமண, பவுத்த நூல்களில் மட்டுமே கிடைக்கிறது . மாறாக இந்த வாழ்வியல் நெறி என்பது மக்களின் மரபுடன் கலந்து இன்றளவும் வழக்கத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்போது வரை இந்த ஆசீவக கோட்பாட்டின்படி முன்னோர் வழிபாடாக, வழிமுறைகளாக இன்றளவும் இங்கு இருக்கும் தேவேந்திர குல வேளாள மக்கள் கடைபிடித்து வருகின்றனர். தமிழர்கள் பல்வேறு குலங்களாக பிரிக்கப்பட்டு வந்துள்ளனர். அவரவர் தன்மை, தோழில், முன்னோர் செய்த வீரச்செயல்கள், நற்பேறு, முதலியவற்றை கருத்தில்கொண்டு அந்த குலத்திற்கு பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். உதாரணமாக ஒரு தலைவன் தனித்து ஒரு சாதனை, வீர செயல் புரிந்த வராயின், அவன் சந்ததிகள் அவன் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக: கண்ணகுலம், அழகன்குலம், கோவக்குலம், கொற்றந்தை குலம், கோவன் குலம், சனகன் குலம் , செங்கண்ண குலம், சேரங்குளம் ,மணியன் குலம், மலையன்குலம், இன்னும் பல..... இவ்வாறு பிரிக்கப்பட்ட குலங்களில் சேரகுலம், பாண்டியர் குலம் போன்ற பெரிய பேரரசு குலங்களும் அடக்கம் .இத்தகைய குலங்களுக்கு ஆதியாக இருப்பது சந்திர குலம் .சந்திர குலம் என்று அழைக்கப்படுபவர்கள் சந்திரனின் உதவி கொண்டு தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் சந்திரனை தங்கள் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். சைவ வைணவத்திற்கு முன்பு இருந்த ஆசீவக காலகட்டத்திலேயே இந்த சந்திர குலத்தவர் நெற்றியிலும் குல, தெய்வ வழிபாட்டிலும் பிறை வடிவ நிலவையும் அதன் மையத்தில் ஒரு புள்ளியும் வைத்து நாங்கள் சந்திரனை குலதெய்வமாக வணங்கக்கூடிய சந்திர குலத்தைச் சார்ந்தவர் என்று உணர்த்தி வந்துள்ளன. இந்த சந்திர குலத்தில் இருந்து தோன்றியவர் தான் இன்று உலகம் முழுவதும் கடவுளாக வணங்கப்படும் பாண்டியர்களின் முதல் மன்னனான சிவன் .இதை உணர்த்தும் விதமாகத்தான் சிவன் சிலையில் தலையின் மீது பிறை நிலா பொறிக்கப்பட்டுள்ளது. சிவனுக்கு பின் வந்த பாண்டிய வேந்தர் பலரும் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள். நீங்கா புகழ் பெற்ற வேந்தர்கள் இறந்தபின் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். அவ்வாறு தெய்வமாக வணங்கப்பட்ட வேந்தர்களும் அவரது பீடங்களும் இந்திரன் இந்திரர் என்று அடையாளப் படுத்தப்பட்டது. வேந்தன் (இறந்த பின்பு) -> தெய்வ வேந்தன் -> தெய்வேந்தன் -> தெய்வேந்திரன் -> தேவேந்திரன். சிவன் தலையில் பிறைநிலா வைத்து தன்னை சந்திர குலத்தவர் என்று அடையாளப்படுத்தியது போல ,இந்திரனும் நெற்றியில் பட்டையும் நாமமும் இல்லாது பிறைநிலா குறியீடு தனது அடையாளமாய் கொண்டுள்ளார். இந்த பிறை வடிவ குறியீடு என்பது இன்றளவும் இருக்கண்குடியில் தேவேந்திரகுல மக்களிடையே வழிபடும் தெய்வங்கள் இடையே காணப்படுகிறது. தற்போதுள்ள இருக்கண்குடி க்கு மேற்குப்புறம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் மூலஸ்தானத்திற்கு செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறத்தில் இந்த பிறை வடிவ குறியீடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .மேலும் அந்த கோவிலின் சில இடங்களில் பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்டு இது பாண்டியர் கோவில் என்று அடையாளப்படுத்துகிறது . மேலும் இங்கு தேவேந்திரகுல மக்கள் வழிபடும் மருதநில வேந்தரான பாண்டியர்கள் வழிபாட்டுடன் தொடர்புடைய இருபத்தொரு பந்தி பால் ராசா , இருபத்தொரு பந்தி புதியவராசா கோவிலில் உள்ள பூடங்களில் இந்த பிறை வடிவ குறியீடானது இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது. தென்பகுதியில் தேவேந்திரகுல மக்கள் வழிபடும் பெரும்பாலான கோவில்கள் ,ராசா கோவில்களில் இந்த பிறை வடிவ குறியீடை காணமுடியும். சந்திரகுலம்-> ( வேந்தன் மறைவுக்குப் பின்) இந்திர குலம்-> (ஆரியர் வருகைக்குப் பின்) தேவேந்திர குலம். தகவல்: Er. மு.காசிராசன் B.E. இருக்கண்குடி. தகவல் 2. இருக்கண்குடியில் ஆசீவகம்

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...