Wednesday, December 16, 2020

வழி சொல்

 உன் விழி ஈர்ப்பு விசையாலே

                      திசைமாறிச்சென்ற என்னை

உன் மொழி இன்பத்தில் 

                       திசைதிருப்பிய கயல்விழியாளே

என் வழி மறந்து போனேன் 

        நீயும் நானும் கரம்கோர்த்து

நம்வழி செல்வோமா...?!
 

தென்றலவள்

 தென்றல் என்னை தீண்டியது
தேவதை உன் 
மூச்சுக்காற்றாய்.....

மதி மயக்கம்

 வெண்மதி உன் முகம் கண்டு

என் மதி மயங்கியது........

Wednesday, December 2, 2020

என்(னை) காதலி

 உன் கடைக்கண் பார்வை 

     போதுமடி

நான் கட்டுக்கட்டாய் 

 கவிதை எழுத

உன் புன்னகை ஒன்று

போதுமடி

புது புத்தகம் ஒன்றை 

நான் படைக்க...

என்னவள்

 கண்களில் காதல் 

உதட்டில் கம்யூனிசம்.....!


Monday, November 16, 2020

கண்மணியே...



 மழைக்கு நடுவில் நீ

உன்னழகில்

மலைத்துப்போய் நான்!!

சில் காதல்


 சில்லென்ற காற்றுக்கு 
நடுவில் சித்திரமே உன் நினைவு

Monday, October 26, 2020

இரண்டற கலந்தவள்

 

அன்னையாய் பிறந்தவளே
ஆருயிராய் இருப்பவளே
இன்பம் பெற்றவளே
ஈடுஇனை அற்றவளே
உலகத்து உண்மைகளை
ஊருக்கே உணர்த்தியவளே
என்எண்ணங்கள் யாவிலும்
ஏற்றத்தில் அமர்ந்தவளே
ஐந்திணைகள் பெற்றவளே
ஒற்றுமை எண்ணத்தை
ஓலைச்சுவடியில் கொடுத்தவளே
ஔவியமின்றி அஃதுடன்
ஆயுதமாய் நிற்பவளே
என் தமிழன்னையே உன்னை
என் சொல்லி வாழ்த்துவனே….

Monday, October 5, 2020

கவி தை க்கு சொந்தம்

 கவிதை பிறப்பது

இந்த கவிஞனின் கைகளிலோ

பேனாவின் முனையிலோ 

இல்லை

என் கண்மணி உன்

கண்களில் பிறக்கிறது

அது

என் மனக்கதவை 

 திறக்கிறது

பின் வார்த்தைகளில் வழுக்கி

காகிதத்தில்  விழுந்து கரைகிறது....

Monday, September 28, 2020

காதல் இரவு

 


பொழுது சாய்ந்தது

இருள் சூழ்ந்தது

இருள்நீக்கி ஒளிகொடுக்க

சந்திரன் வந்தான் உற்சாகமாய்

திடீரென ஒளிந்துகொண்டான்

சிறிது நேரத்தில்

அவனைவிட பிரகாசமான ஒளி

என்னருகில் ஒளிர்வதைக்கண்டேன்

திரும்பிப்பார்த்தேன்

என் கண்னுக்கினியவள் என்

கண்ணருகே நின்றாள்

எங்கே அவள் கண்ணில் பட்டால்

அவள் அழகில் மயங்கி

கைகட்டி சேவகம் செய்யவேண்டுமே

என்று பயந்தானோ என்னவோ

அவள் செல்லும்வரை

அவன் வரவும் இல்லை

என்னவள் பிரகாசம் குறையவும் இல்லை

சற்று நிமிர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தேன்

மின்னும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டாமல்

அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன

அவைகளும் ஒன்று சேர்ந்து மாலையாகி

அவள் கழுத்தில்விழ என்னதவம் செய்யவேண்டுமோ

என்று கூடிப்பேசிக்கொண்டனபோலும்

அமைதியான அந்த வேளையிலே

அழகிய தென்றல் அவளை தீண்டி

அவள் கருங்கூந்தலில் மோதி வெளியே வந்ததும்

சந்தன மரங்களில் மோதி

மல்லிகை இதழ்களைத் தட்டி

அனிச்சம் மலரை உரசி வந்த வாசமுடன்

என்னைக்கடந்து சென்றது

வழியில் ஒரு பட்டமரம் குறுக்கிட்டது

அவளைத்தொட்ட தென்றல் அதன்மீது

பட்டவுடன் அந்த பட்டமரம்

தளிர்த்தது பூக்களைப்பூத்தது

அந்தப்பூக்களெல்லாம் ஒன்றுடன் ஒன்று

போட்டிபோட்டது

  அவள் கூந்தலில் குடியிருக்கும்

குடுப்பனை யாருக்கு என்று

மீண்டும் ஒரு இனிமையான தென்றல்

ஆனால் சற்றுவித்தியாசத்துடன்

மோகத்தைத் தூண்டும் விதமாய்

காதல் தாகத்தை சீண்டும் விதமாய்

என்னை தழுவிக்கொண்டது அந்த தென்றல்

அது வேறேதுமில்லை என்னவளின் மூச்சுக்காற்றுதான்

அவள் மூச்சுக்காற்றில் நான் மூர்ச்சையானேன்

மதியை மயக்கிய அழகி

வெண் மதியை மயக்கிய பேரழகி

என் காதல் கண்மணியுடன் இரவில் ஒரு பொழுது

கரம்கோர்த்து கதிரவன் வரும்வரை

காதல் கீதம் இசைக்க காதில் அவள்

இனிய குரல் என்னும் இன்பத்தேன் சுவைக்க

கடந்து செல்லட்டும் காதல் இரவாய்……….😍😍😍😍

Friday, September 25, 2020

நான் பூதங்களின் எதிரி?

 

நிலம் பெருமைகொண்டது

 உன்பாதம் பட்டதால்

நீர் மோட்சம் பெற்றது

உன் மேனியைத் தொட்டதால்

காற்று உன்னிடம் கைதியானது

உன்மூச்சு பட்டதால்

வானம் வண்ணமயமானது

உன் பார்வை பட்டதால்

ஆதவனும் அசந்துபோனான்

உந்தன் அழகுமுகம் பார்த்ததால்

அன்பே!

நான் என்ன பாவம் செய்தேனோ?

என்னை காதலித்து கரம்பிடித்து

பஞ்சபூதத்திற்கும்  என்னை

எதிரியாக்கிவிட்டாயே!!

நான் என்ன பாவம் செய்தேனோ....

அடங்கமறு

 

அடக்கம் அழகுதான்

ஆனால் அத்துமீறும்

உன் கூந்தல்

 அதைவிட அழகு.........

144 காதல்

 

 

ஊரடங்கு காலத்திலும்

அடங்கமறுக்குதடி

அன்பே நான்

உன்மீது கொண்ட

காதல்…

Monday, August 3, 2020

கோவில் கொடை வரலாறு



 
பொதுவாக  கிராமங்களில் சிறுதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடுகள் கொடை(கோவில் கொடை),என்கிற பெயரில்தான் நடைபெரும் அதிலும்பெரும்பாலான கோவில்கள் இராசா கோவில்,கருப்பசாமி கோவில்மாடசாமி (சுடலைமாடசாமி கோவில்அய்யனார் கோவிலாகத்தான் இருக்கும்.
   இந்த கொடைவிழா கலணி ,கல்யாணம் என்று வேறுசிலபெயர்களாலும் அழைக்கப்படுகிறதுஇந்தகோவில் கொடை என்பது  என்ன?  இதன் மூலமும் ஆதியும் என்னஎன்பதை இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையின் மூலம் காண்போம் .
  பெருமபாலும் இந்த வழிபாட்டுமுறை ஓர் அரசனையோ அல்லது அவன் ஆட்சியின் கீழ் உள்ள தளபதியையோ ஏனைய வீரனையோ மையமாக வைத்து நடைபெருகின்றனகொடை என்பது பரிசளித்தல் ,அளித்தல் , தானம் ,கொடுத்தல் என்று பொருள்படும் இங்கு கொடுத்தல் என்பதை எடுத்துக்கொள்வோம்.ஆனால் இந்த கொடைவிழாவில் அரசன் மக்களுக்கு கொடுப்பதற்கு மாற்றாய் மக்கள் அரசனுக்கு கொடுக்கின்றனர்ஆம் இந்த கொடைவிழா தமிழ்க்குடிமக்களின்  காலத்தின் சாரமாய் கலாச்சாரமாய் இருந்து வருகிறதுஇந்த  கொடைவிழாவின் துவக்கம் முதல் முடிவு வரை கடவுளைத்தவிர்த்து தம்மை திறமுடன் ஆண்ட அரசனையும் ,அவரது படைத்தளபதிகளையும்அரசகுடும்பத்தினரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியாக வருடம்தோறும் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும்இந்த கருத்திற்கு கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாய் சில சான்றுகள் அமைந்துள்ளது அதைப்பற்றி காணலாம்.
 அனத்து கோவில்களிலும் இந்த கொடைவிழா ஒரேமாதிரியான வழிமுறைகளை கொண்டுள்ளது.
எடுத்தவுடன் மேளதாளங்களுடன் அந்த கோட்டை (கோவிலின்நாயகனுக்கு அதாவது அரசனுக்கும் தளபதிகளுக்கும் மரியாதை செய்து தங்கள் மக்களைக்கணவருமாறு அழைப்பார்கள் இதற்கு குடியழைப்பு என்று பெயர்குடிமக்கள் தங்கள் அரசனை அழைப்பதால் இதற்கு குடியழைப்பு என்று பெயர் வந்துள்ளது.
  இரண்டாம் கட்டமாக அரசனின் உத்தரவுடன் பூசை ஆரம்பமாகும் முதலில் பொதுபூசை அதாவது கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் (இன்று தெய்வமாய் வணங்கப்படும் அரசர்களுக்கும் முன்னோர்களுக்கும் ) பொதுவாய் ஒரு பீடத்தில்(இருக்கைபூசை நடைபெரும் அந்த காலத்தில் அனைவரையும் ஒன்றாய் நிருத்தி வரவேற்ற மரபு பின்னாளில் இந்த பூசைக்கு வித்திட்டிருக்கிறதுஅதன் பின்னர் அவரவர் இருக்கையில் அவர்களை அமரவைத்துள்ளர்  அல்லது அவர்கள் அமர்ந்து கொண்டனர்.
    அடுத்தகட்டமாக  ஒவ்வொருவருக்கும் தனித்தனியே படையளிட்டு பூசை நடக்கும் முதலில் இராசா அதன் பின்னர் இராணி அதற்கு பின்னர் இராசாவின் சகோதர சகோதரிகள் அவர்களைத்தொடர்ந்து  மந்திரி,அவைத்தலைவர்கள்படைத்தளபதி ,படைவீரர்கள் என்று முறையாய் வரிசையாய் அமுது படைத்து (விருந்து அளித்துவந்துள்ளனர்.
    அதற்கு பின்னர் வாக்கு கேட்கும் நிகழ்வு நடைபெருகிறது.அதாவது அரசனும் அவைத்தலைவர்கள் மற்றும் தளபதி உள்ளிட்ட  அனைவரும் தங்கள் நாட்டின் கடந்தகால நிகழ்வுகளையும்  எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்து பற்றியும்  தாங்கள் அறிந்துகொண்டதை  பகிர்ந்துகொண்டும்  தங்கள் குடிமக்களின் குறைகளை அறிந்துகொண்டும்  அதற்க்கு தீர்வு கூறி நடவடிக்கை எடுத்துவந்துள்ளனர்.இந்த நிகழ்வு இன்று வாக்கு கேட்கும் நிகழ்வாய் குறிகேட்கும்  நிகழ்வாய் நடைமுறையில் இருக்கிறது.
 இறுதியில்  இங்கு கழுங்கு (கழுஎன்று கூர்மையான சற்று உயரமான மரத்தால் செய்யப்பட்ட அமைப்பு இருக்கும் , சேவல் ,ஆடு போன்றவற்றை அதில் ஏற்றி பலியிடுவார்கள்.
 இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன  ஒன்று அந்த காலத்தில் கற்பழிப்பு,தேசவிரோதம்,தேசதுரோகம் போன்ற மிகப்பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு  கடுமையான தண்டனையாய் இந்த கழுவேற்றம் இருந்துள்ளதுஅதாவது அந்த கூர்மையான கழுவில் எண்ணெய் ஊற்றி பின்னர் அதன் கூர்மையான முனையில் அந்த குற்றவாளியை கைகளையும் காலையும் கட்டி அமரவைத்துவிடுவர் கூர்முனையானது ஆசனவாய்வழியே உள்ளே சென்று நேரமாகஆக உடலின் பிறபகுதிகளை கிழித்துக்கொண்டோ அல்லது வாயின் வழியாகவோ வெளியே வந்துவிடும் மிகக்கடுமையான வேதனையுடனும் பயங்கரமான ஓலத்துடனும் அவன் உயிர்பிரியும் இறந்த பின் அந்த குற்றவாளியின் உடலைக்கூட எடுக்கக்கூடது அடக்கம் செய்யக்கூடாது மாறாய் அந்த பிணத்தை நாய் ,நரி போன்ற விலங்குகளும் , காகம்,கழுகு போன்ற பறவைகளும் தான் உண்ணவேண்டும்.இத்தகைய கொடுமையான தண்டனைகள் அந்தக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது.ஏதோ சில காரணங்களுக்காக சமணர்கள் கழுவேற்றப்பட்டது இப்படிபட்ட தண்டனைகள் தமிழகத்தில்  
இருந்ததற்கு சான்றாக இன்றளவிலும் இருக்கிறது.
 
 இரண்டாவது இதுபற்றி ஓர் சிறிய கதை உள்ளது  ஓர் அரசன் போருக்குச் செல்லும்முன் கழுவில்  ஓர் ஆட்டினை குத்திவைத்துவிட்டு இந்த ஆடு இறக்கும் முன் போரை முடித்து வெற்றியுடன் வருவேன் என்றும் மாறாய் இந்த ஆடு இறந்துவிட்டல் போரில் தோல்வியடைந்து வீரமரணம் அடைந்துவிட்டேன் என்று அறிந்துகொள்வாயாக என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றதாகவும் அதன் காரணமாகவே இன்றும் கோவில்களில் கழுவில் பலிகொடுக்கும் நிகழ்வு நடைபெறுவதாகவும் ஒரு செவிவழிச்செய்தி இருக்கிறது.
இந்த இரண்டு காரணங்களில் முதலாவதாய் தெரிவிக்கப்பட்ட செய்திக்கு வரலாற்றில் அதிகப்படியான சான்றுகள் கிடைக்கின்றன.இறுதியில் விருந்துமுடிந்தவுடன் மஞ்சள்நீர் தெளித்து அரசரையும்  அவரது பரிவாரங்களையும் அரண்மனைக்கு இந்த குடிமக்கள் அனுப்பிவைக்கின்றனர்.
  மேலும் சில சான்றுகள் இதற்கு வழுசேர்க்கின்றனஇன்று தெய்வங்களாக வணங்கப்படும் இவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை சான்றாக கூறலாம்.இராசவிற்கு பிரம்பு அல்லது செங்கோல்தளபதி உட்பட அனைத்து வீரர்களுக்கும்  வல்லயக்கம்
பு(சிலம்பக்கம்பு) ,வாள்வேல்கம்புவெட்டருவாள்,சாட்டை ,சுருள்வாள் போன்ற ஆயுதங்களைக்கொடுத்திருப்பார்கள்.இன்று சாமியாடுபவர்களில் காவல் தெய்வம் என்று குறிப்பிடப்படும் வீரர்களின் கைகளில்  தீப்பந்தங்களைக் கொடுப்பார்கள் காரணம் அந்த வீரர்கள் காவலுக்குச்செல்லும் போது வெளிசத்திற்க்கக அந்தகாலத்தில் தீப்பந்தத்தை எடுத்துச்சென்றுள்ளனர்இந்தவழக்கம் தான் வழிவழியாய் தொடர்கிறது.

மேலே
கூறப்பட்டுள்ளசான்றுகள் மூலம் இந்தகோவில் கொடைவிழா என்பது அரசனுக்கு,தளபதி உட்பட ஒப்பற்ற வீரர்களுக்கும்  குடிமக்கள் மரியாதைசெலுத்தும் விழாவாகவும் நடுகல் வழிபாடு போன்று அந்த வீரர்களின் வீரத்தையும் நீதியையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும் எடுக்கப்பட்ட விழாதனே தவிர புராணஇதிகாசங்களை போன்று மூடநம்பிக்கைகளை விதைப்பது அல்ல என்பது உறுதியுடன் சந்தேகதிற்கு இடமின்றி  நிரூபனமாகிறது.
தமிழர் வரலாறு தொடர்ந்து மீட்டெடுக்கப்படும்

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...